மூஞ்சி புக்கும் – தன்னுருவும்


தமிழில் உள்ள ஒரு வசதி அயல் மொழி சொற்களை எளிதாக தமிழ்ப்படுத்த வாய்ப்புள்ளது.  அதில் தமிழர்களுக்கும் அலாதி இன்பம்.  இப்படித்தான் facebook என்பதையும் முகநூல் என்று அழகாக தமிழ் படுத்தி உள்ளனர்.  மேலும் செல்லமாக குறும்பர்கள் சிலர் மூஞ்சிபுக் என்றும் வெறுப்பேற்றுகின்றனர்.

இந்த முகநூலை பலர் பலவழியில் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் பெரும்பாலானோர் முகநூல் என்ற பெயருக்கு ஏற்றபடி தங்களையே வித விதமாக தன்னுரு (selfie) எடுத்து பதிவிடுகின்றனர்.  இதை எல்லாம் மீறியும் இன்று பதிவுகள் பல வலைப்பூக்களில் பதிவிடுவதை விட இதில்தான் அதிகம் பதிவிட படுகிறது என்பதும் ஆறுதல் தருகிறது.  இன்றைய தலைமுறையினர் இடையே  நல்ல பதிவுகள் இடுவதை விட தினம் ஒரு தன்னுரு எடுத்து பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாகி வருகிறது.  முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் கண்ணாடி பார்த்து தம்மை ரசித்து கொண்டார்கள்.  இன்றோ ரசனையுடன் தன்னுரு எடுத்து பலரும் பார்க்க பொதுவில் வைக்கிறார்கள்.  அதை பலர் விரும்ப வேண்டும் என்றும் விருப்பம் கொள்கின்றனர்.  பதிவுகளுக்கு கிடைக்கும் விருப்புகளை (like) விட இந்த மாதிரியான தன்னுருக்களுக்கு அதிகமாகவே விருப்பு கிடைக்கின்றன.

இதைதான் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது.  மக்கள் அரசியல் பார்வையும் கருத்தும் கொண்டிருக்கலாகாது அதை மடைமாற்ற இந்த மாதிரியான விடயங்கள் அவர்களுக்கு தானாகவே உதவுகின்றன.   ஆடி காற்றில் அம்மி பறப்பது போன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன.  அவையெல்லாம் காற்றில் ஊதிய நீர் குமிழ் போல் காணாமல் போகின்றன.

Advertisements

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE
This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s