நாயின் மக்களும், நமோவின் தேங்காயும்!


மன்னிக்கணும். இருக்குற அவசரத்தில நம்மோட கருத்தையும் பதியனும்கிற ஆர்வத்தில தலைப்ப தப்பா எழுதி தொலைச்சிட்டேன்.

நாயின் தேங்காயும் , நமோவின் மக்களும் – இப்படித்தான் எழுதனும்னு நினைச்சேன்.

நாயிடம் கிடைத்த தேங்காய என்ன செய்றதுன்னு தெரியாம உருட்டி உருட்டி விளையாடுமாம். அப்படி ஆகிபோச்சி இப்போ நாட்டு மக்களோட நிலைமை. நான் மக்கள்னு சொன்னது அன்றாடங்காய்ச்சிகளையும் கீழ் நடுத்தர மக்களையும் தான். கட்டி இருக்கிற கோவணத்தை உருவினால் கூட தேசபக்தி கோசம் போடும் கூட்டத்தை பத்தி கண்டிப்பா இல்ல.

இந்த 500 மற்றும் 1௦௦௦ ரூபாய் தாள்கள் கடந்த ஒரு வாரமா மக்களை பாடா படுத்துது. இந்த தாள்களை வைத்துக் கொண்டு செலவும் செய்ய முடியவில்லை. வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் எடுபதற்கும் பல சிரமங்கள். 1,2,3,5 காசுகள் மற்றும் 1,2,5 ரூபாய் தாள்கள் என செல்லாக்காசாகி போனது எல்லாம் இயல்பா இருந்தது. இவ்வளவு செயற்கைத்தனம் இருந்தது இல்லை. மக்கள் இவ்வளவு சிரமத்தை சந்திக்கவும் இல்லை. அன்றாட செலவுகளுக்கே பணம் தேடவண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். கையில் இருப்பதோ 500 மற்றும் 1௦௦௦ அதை மாற்ற 11௦௦ மீட்டர் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். அதுவும் அவர்களின் அன்றாட பிழைப்பை விட்டுவிட்டு. நாடு இருக்கும் நிலையில் அன்றாட பிழைப்பை ஓட்டுவதே சவாலாக இருக்கும் நிலையில் இந்த களேபரத்தால் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. இப்படி தடாலடியாக செல்லாது என அறிவித்து இருப்பது மலிவான ஒரு அரசியல் உத்தியாகவே உள்ளது.

Advertisements

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE
This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s