உகரக் காதல்
உயிரில்லா உடலுக்கு நிகராம்
உன் நினைவிழந்து திரிவது!
உனை மறப்பதுவும் இயலுமோ!
உதிருமா உன்மீது கொண்ட
உரிமைக் காதல் என்றும்?
உயரிய எந்தமிழ் ஓங்கும்
உகந்த காலந்தனை காணும்
உவகையுடன் இம்மா நிலத்தில்
உலாவி வருவேன் நித்தமும்!
உண்மையில், துயிலும் எரிமலையாய்
உள்நின்று கனறும் நின்மேல்
உள்ளப்பற்று எந்நாளும் எமக்கு!
Advertisements