‘ஓ’காரக் காதல்:
ஓயாதே ஒருநாளும் எந்தமிழ்மீது
ஓங்கி நிற்கும் காதலலை!
ஓட்டிடுவேன் வாழ்வதனை பைந்தமிழ்
ஓதலில்! கிணற்று தவளையென
ஓலமிடும் வாயடைக்க வழிகாண்பேன்!
ஓரங்கட்டிடுவேன் நற்றமிழ் விருந்து
ஓம்பாதவரை! கண்ணிற் கினிதாம்
ஓவியம்போல் செவிக்கினிதாம் செந்தமிழ்
ஓசையென முழங்கிடுவேன் முரசாய்!
ஓலைக்காலந் தொட்டு நன்னெறி
ஓதிவரும் எந்தமிழ்மேற் பற்றெனும்
ஓடங்கொண்டு கடந்திடுவேன் வாழ்வதனை!
Advertisements