பெண்ணியமும் பேராண்மையும்


பெண்ணியம் குறித்து அன்று முதல் இன்று வரை பலர் பேசுவதையும், எழுதுவதையும், கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். மேலும் பெண்கள் குறித்து பெண்கள்தான் பேசவேண்டும் என்றும் பல பெண்ணியவாதிகளும் வாதிடுகின்றனர்.  இதுவும் நமக்கு ஏற்புடையதாக இல்லை.

பெண்களுக்கு விடுதலை கொடுக்கவேண்டும் என்று பேசுபவர்களும் ஏராளம்.  அவர்களுக்கு விடுதலை கொடுக்க நாம் யார்?  அவர்களை உற்ற தோழியாக கருதினால் போதாதா?  ஆண்கள் ஒருபாலினம் போல பெண்கள் ஒருபாலினம் என்று கருதினாலே அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே.

அவள் ஒரு பெண்தானே என்ற இளக்காரம் ஒவ்வொரு ஆண் மனதிலும் ஆழமாய் வேரூன்றி உள்ளது.    நாம் நம் சமூகத்தில் வளர்ந்து வந்த விதம் அப்படி.  அது போன்ற தருணங்களை நான் நன்கு உணர்கிறேன்.  அது போன்று நினைப்பதையோ பேசுவதையோ கூட தவிர்த்து வருகிறேன்.  எனவே ஆண்கள் திருந்த பலகாலம் பிடிக்கும் செயலாகும்.  ஆகவே பெண்கள் தங்கள் இருப்பை தாங்களே தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இன்று எந்த துறையிலும் பெண்களை சகத்தோழியாக நினைப்பதில்லை.  தன் மனைவியைக்கூட சமமாக மதிப்பதில் கவுரவம் பார்ப்போரும் உள்ளனர். அலுவலகங்களிலும் உடன் இருக்கின்ற வரை சிரித்து மரியாதையாக பேசுபவர்கள்கூட பின்னால் இளக்காரமாகவும் இழிவாகவும் பேசுவதை கேட்கவும் நேரிடுகிறது.

அதிலும் திரைத்துறையை எடுத்துக்கொண்டால் பெண்களை மிகுதியாக கொச்சைப்படுத்தும் போக்கு மலிந்துகிடக்கிறது.  பணம்நிறைய கிடைப்பது கூட, அவர்கள் சகித்து கொண்டிருக்க காரணமாயிருக்கலாம்.  அதிலும் ஆண் நடிகர்களுக்கு கிடைப்பதில் பலமடங்கு குறைவான சம்பளம்தான் பெண் நடிகைகள் பெறுகிறார்கள்.  இருந்தாலும் நடிகர்களுக்கு இவ்வளவு பெரும்சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது வேறொரு கட்டுரைக்கான கருவாக இருக்கும்.

நம் திரைப்பட கதாநாயகர்கள் அனைவரும் தாய்மார்களை கவர்வதற்கு பெரும்போட்டியில் உள்ளனர்.  ஆனால் அவர்கள் விரும்பி பேசும் வசனங்களை கூர்ந்துகவனித்தால் அதேதாய்மார்களை எவ்வளவு கேவலமாக எடை போடுகிறார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.

எடுத்துக்காட்டாக நம் உச்சநட்சத்திர கதாநாயகர்கள் அடிக்கடி பேசும் வசனம்தான், நம்மை எரிச்சலடைய வைக்கிறது.  அது என்னவென்றால் – நான் ஆம்பளடா –   என்று ஓயாமல் படத்திற்கு படம் பேசுவது.  இது ஏதோ ஒரு வழக்கமான வசனமாக தெரியலாம்.  படம் பார்க்கும் ரசிகர்களும் அந்நேரத்தில் கைதட்டி ஆரவாரம் செய்யலாம்.  ஆனால் அந்த வார்த்தையின் பின்னால் மிகப்பெரிய வக்கிரபுத்தியும் ஆணாதிக்க திமிரும் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.   நான்ஆம்பள – எனும் போதே பெண் என்பவள் எவ்வளவு தாழ்வானவளாக உருவகப் படுத்தப்படுகிறாள் என்பது வெளிச்சமாகிறது.

இந்த மாதிரியான வசனத்தைக்கூட தவிர்க்கும் கதாநாயகர்களே பெண்ணியத்தை போற்றுபவர் என்று கொள்ளலாம்.  ஆனால் ஒன்று, அதை நம் பெண்களே கூட வரவேற்பார்களா என்று தெரியவில்லை.  அல்லது இந்த வசனங்கள் அவர்களை பாதிக்கிறதா என்று கூட தெரியவில்லை.  இனியாவது நம் திரை வசனகர்த்தாக்கள் திருந்தட்டும்.

இப்படி சின்னவிடயம் என்று நாம் நினைக்கும் பல விடயங்களில் பெண்ணை குறைத்து மதிப்பிடும் அல்லது இளக்காரமாக நினைக்கும் போக்குகள் நிறைந்து காணப்படுகின்றன.  இதனால்தான் சிறுவயதில் இருந்தே பெண் என்பவள் இரண்டாம்தர பாலினமாகவே கருதப்பட்டு வருகிறாள்.  அப்படி வளர்ந்துவரும் ஆண்பிள்ளைகள் எப்படி பெண்களை தங்களைப் போன்ற ஓர் உயர்திணையாக நினைப்பார்கள்?

இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், தமிழ் இலக்கணமானது பெண்களையும் உயர்திணையில்தான் வைத்துள்ளது.  தமிழின் வழி தனி வழி என்பதற்கு  இப்படி பற்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  ஆனால் இச்சிறப்பு மற்ற மொழிகளில் இருப்பதாக தெரியவில்லை.  குறிப்பாக இந்தி இலக்கணம் பெண்களை அஃறிணையில்தான் வைத்துள்ளது அல்லது அஃறிணைகளை பெண்பாலில் வைத்துள்ளது என்றும் கொள்ளலாம்.  ஆக மொத்தம் இந்தியில் ஆண்பால் பெண்பால் என இரு பால் வகைகள்தான்.  இவ்வாறு தமிழானது ஒரு வாழ்வியல் மொழி என்பதை நாம் அறிய வேண்டும்.

பெண்களும் சமூகப்பொறுப்புடன் ஒட்டுமொத்த ஆண்களையும் வெறுத்தொதுக்காமல் நடக்கவேண்டும் என்பதைநாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.  நடை, உடை, பாவனைகளில் ஆணைப் போன்று இருந்தால்தான் முற்போக்கானவள் என்று இன்றைய இளம்பெண்கள் பலர் நினைக்கின்றனர், போலும்.  சேலையில் இருக்கும் பெண்களுக்கும் அறிவு தெளிவு இருக்கும் என்பதை மறக்கலாகாது, மறுக்கலாகாது. அவரவர் வசதிகேற்ப நடை, உடையுடன் இருப்பதில் தவறில்லை யென்றாலும் மாற்றாரை குறைவாக நினைப்பது தவறாகும்.

பெண்ணில்லாமல் ஆணில்லை என்பதை உணர்ந்து, ஆண்கள் அனைவரும் ஒவ்வொரு தருணத்திலும் பெண்களை ஏளனமாக நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம் என்று உறுதிகொள்ள வேண்டும்.

Advertisements

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE
This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s