ஒரு வருட முன்பொரு பதிவினில் தெளிவாக குறிப்பிட்டபடியே ரசினி அவரது பொருளாதார நலன் சார்ந்தே முடிவுகளை எடுக்கிறார் என்பது தற்போதைய பேட்டிகளை நோக்கினால் நன்கு விளங்கும்.
ஆரம்ப முதல் கொண்டே அவர் சங்கிமகனாகத்தான் உள்ளார். தமிழகத்தில் எடுபடமுடியாமால் இருக்கும் சங்கி கூட்டம், இவரின் பிரபலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காவி வளர்க்க பார்க்கிறது. அதற்கு அவரின் பலவீனத்தை கண்டறிந்து, வருமான வரி வழக்கு மிரட்டல் முதலியவை மூலம் அவரை சுலபமாக வழிக்கு கொண்டு வந்திருக்கிறது. இயல்பாகவே அவர் காவி சிந்தனை கொண்டவராக இருந்தாலும், தமிழக சூழலில் அதனை வெளிப்படுத்த தயங்கியவர். ஆனால் தற்போதைய கிடுக்கி பிடியில் தாக்கு பிடிக்க முடியாமல் தன்னோட பொருளாதார நலன் கருதி இத்தகைய இழிநிலைக்கு இறங்கி இருக்கிறார்.
இவர் ஒரு முறை நகைச்சுவை நடிகர் விவேக்கை அவரது அறிவை மெச்சி பார்ப்பனர் என்று நினைத்ததாக கூறியபோதே தமிழர்கள் விழித்திருக்க வேண்டும், இவரது அறிவை கண்டு. துக்ளக் படிக்கும் பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள் என்று நினைத்துதான் அவர் அன்று அந்த பார்ப்பன குல மங்கை லதாவை மணந்தது. இது நகைச்சுவை என்று நினைப்பவர்கள் விவரம் அறியாதவர்கள்.
பெரியாரை எல்லாம் புரிந்து பேசும் அளவிற்கு இவருக்கு சுயஅறிவு இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவரின் கொள்கைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே அறிவுடையவர்கள். அவர்கள் சொல்வதுதான் நம்பகமானவை. சமூகநீதி மண்ணான தமிழகத்தின் தன்மை அவருக்கு விளங்காது. அவரை பிரபலமடைய வைப்பதற்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள் அவாள்கள் இல்லை; பெரியாரின் உழைப்பினால் இன்று நிமிர்ந்து நிற்கும் கூட்டமும், விளிம்புநிலை மக்களான, தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும்தான்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி அவசியம் இல்லை..