Author Archives: த.வெ.சு. அருள்

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE

தமிழ்ப் பயணம்


வரங்கொடு இறைவா! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், முத்தமிழாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழ்க்கனியாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழிசையாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழ்க்கலையாய் பிறக்க! இல்லையேல், வரங்கொடு இறைவா என் தமிழ் மீதுள்ள ஆர்வம் குறையாமலிருக்க! Advertisements

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


முத்தமிழ் மூமூவாய் விளங்கும் முத்தமிழே! மா, பலா, வாழை யென உன் கனி பிரிப்பர்! யாழ், குழல், மழலை யென உன் இசை பிரிப்பர்! இனிமை, சுவை, எளிமை யென உன் குணம் பிரிப்பர்! ஆல், வேம்பு, அரசு யென உன் மரம் பிரிப்பர்! அன்பு, பண்பு, அரவணைப்பு யென உன் அறம் பிரிப்பர்! இயல், … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் தமிழரிடத்தில் … (2)


தமிழர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவமானது சொல்லிக்கொள்ளும்  நிலையில் இல்லாதது கண்டு மனம் வருந்தவே செய்கிறது.  எனவே அதனை அதிகரிக்க கைகொள்ள வேண்டிய வழிமுறைகளாகவன: வீட்டுத்தமிழ்: எந்தொரு செயலையும் முதலில் தம்மிடம் இருந்து தொடங்குவது மட்டும்தான் மிகவும் சிறப்பு தரும்.  அந்த அளவில் தமிழர்களான நாம் தமிழை நம் இல்லந்தோறும் பழக்க வேண்டும்.  தமிழகமோ, வெளி … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

தமிழ் தமிழரிடத்தில் … (1)


“தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” என்று கேட்கும் நிலையில் உள்ள தமிழர்களான நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விடயம்.  என்ன செய்வது? இதன் அக/புற காரணிகள் எண்ணிலடங்காது. அகக்காரணிகள் என்பவை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் அல்லது இழுக்கும் எனலாம். புறக்காரணிகள் என்பவை தனிமனிதனின் கட்டுப்பாட்டுக்குள் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு


ஒத்துழைப்பு மன மொரு மந்தியெனில் செந்தமிழ் கிளைகள் பலவுளது! நினை வொரு பறவையெனில் பைந்தமிழ் வானம் பரந்துளது! ஆர்வ மொரு ஊற்றெனில் அருந்தமிழ் காக்க தேவையுளது! ஆக்க மொரு நோக்கமெனில் பொற்றமிழ் போற்ற வேண்டியுளது!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல்


அவாள்கள் உள்ளே பிச்சை எடுப்பதை பற்றி என்றும் அசிங்க படமாட்டார்கள்.  ஆனால் வெளியே பிச்சை எடுப்பவர்களின் நலனுக்காக போராடியவரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

திணிப்பு


தமிழின்பால் கொண்ட பற்றால் போற்றுவேன் என்னருந் தலைவரென! அவர்தம் புகழ் பாடவில்லை அரசியல் தலைவ ரென்று! தன்விருப்பு வெறுப்பினை திணியாதிருப்பேன்! மாற்றார் மேல் என்றும்! ஆனால் திணித்தேயிருப்பேன்  தாய்த்தமிழை ஏற்றுக் கொள் என்றும்! தாய்ப்பால் சேய்க்கு உகந்தது என யாவரும் உணர்ந்தோம்! அதுபோல் தாய்த்தமிழும் தமிழின் சேயாம் நமக்கு இன்றியமையாததாகும்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக