Category Archives: கவிதைகள்

தமிழ்ப்பயணம்


உயர்வு செந்தமிழ் கற்க, தமிழாவ லுயரும்! தமிழாவ லுயர, தமிழ்ப்பற்று யரும்! தமிழ்ப் பற்றுயர, தமிழ்மொழி உயரும்! தமிழ்மொழி உயர, தமிழ்ப்புகழ் உயரும்! தமிழ்ப்புக ழுயர, தன்னாலே தமிழராம் நாம் உயர்வோம்! Advertisements

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


அமிழ்தம் ஆருயிர் அமிழ்தே! உன் பெயர்தான் தமிழோ! உனை நினைத்தாலே உருகிப் போகுதெம் மனசு! நின் மொழிக் கடலில் மூழ்க துடிக்குதெம் முசுரு! பருக பருக திகட்டா தீஞ்சுவை நீயோ! அதை அறியாதோர் யாவரும் பேயோ!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


செம்மொழி செம்மொழியே! உன்னை செம்மையாக்கியதில் ஆன்றோரும் சான்றோரும் பெருமைப்பட்டுக் கொள்வதில் பெருமையில்லை! அகிலமே உன்னை அரியணையேற்றினாலும் அயல்மொழியை ஆராதிக்கும் கூட்டமிங்கு இன்னும் குறையவில்லை! எளியோரும் தமிழை கற்றாலே நின் வனப்பு சாத்தியமாகுமென்ற ஆவலும் அற்றுப் போகவில்லை!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


வரங்கொடு இறைவா! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், முத்தமிழாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழ்க்கனியாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழிசையாய் பிறக்க! வரங்கொடு இறைவா நீ உண்டெனில், தமிழ்க்கலையாய் பிறக்க! இல்லையேல், வரங்கொடு இறைவா என் தமிழ் மீதுள்ள ஆர்வம் குறையாமலிருக்க!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


முத்தமிழ் மூமூவாய் விளங்கும் முத்தமிழே! மா, பலா, வாழை யென உன் கனி பிரிப்பர்! யாழ், குழல், மழலை யென உன் இசை பிரிப்பர்! இனிமை, சுவை, எளிமை யென உன் குணம் பிரிப்பர்! ஆல், வேம்பு, அரசு யென உன் மரம் பிரிப்பர்! அன்பு, பண்பு, அரவணைப்பு யென உன் அறம் பிரிப்பர்! இயல், … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு


ஒத்துழைப்பு மன மொரு மந்தியெனில் செந்தமிழ் கிளைகள் பலவுளது! நினை வொரு பறவையெனில் பைந்தமிழ் வானம் பரந்துளது! ஆர்வ மொரு ஊற்றெனில் அருந்தமிழ் காக்க தேவையுளது! ஆக்க மொரு நோக்கமெனில் பொற்றமிழ் போற்ற வேண்டியுளது!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

திணிப்பு


தமிழின்பால் கொண்ட பற்றால் போற்றுவேன் என்னருந் தலைவரென! அவர்தம் புகழ் பாடவில்லை அரசியல் தலைவ ரென்று! தன்விருப்பு வெறுப்பினை திணியாதிருப்பேன்! மாற்றார் மேல் என்றும்! ஆனால் திணித்தேயிருப்பேன்  தாய்த்தமிழை ஏற்றுக் கொள் என்றும்! தாய்ப்பால் சேய்க்கு உகந்தது என யாவரும் உணர்ந்தோம்! அதுபோல் தாய்த்தமிழும் தமிழின் சேயாம் நமக்கு இன்றியமையாததாகும்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக